செய்திகள்

அமெரிக்காவில் தீபாவளி: அதிபர் ஜோ பைடன் குத்து விளக்கேற்றி கொண்டாட்டம்!

கல்கி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் குத்துவிளக்கு ஏற்றும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு, பகிர்ந்து கொண்டதாவது:

தீபாவளிப் பண்டிகையான இன்று, இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த தீபங்கள் நமக்கு நினைவூட்டட்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இவ்வறு ஜோ பைடன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது டிவிட்டர் பதிவில், ஒரு வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தீபத்திருநாளாம் தீபாவளியை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT