Pythons on the roof of the house.
Pythons on the roof of the house. 
செய்திகள்

வீட்டுக் கூரையில் மலைப்பாம்புகள்.. அசால்டாக பிடிக்கும் இளம் பெண்ணின் வீடியோ!

கிரி கணபதி

ஸ்திரேலியாவில் தன் வீட்டுக் கூரையில் இருந்து இரண்டு மலைப்பாம்புகளைப் பிடிக்கும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக, அந்த காணொளியில் எந்த பயமுமின்றி அவர் பாம்புகளைப் பிடிப்பது ஆச்சரியமாக உள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண் தன் வீட்டுக் கூரையிலிருந்து இரண்டு மலைப்பாம்புகளை பிடிக்குமாறான வீடியோ இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வீட்டின் மேற்குரையில் ஓட்டை போட்டு, வெறும் கைகளாலேயே பாம்புகளை பிடித்து இழுக்கிறார். 

அந்த காணொளியில் அந்த இளம் பெண் வீட்டில் உள்ள ஒரு மேசை மீது ஏறி, வீட்டின் மேற்குறையில் உள்ள பாம்புகளை அகற்றப் குச்சியைப் பயன்படுத்துகிறார். அடுத்த சில நொடிகளில் பாம்பு ஒன்று வெளிய வரத் தொடங்குகிறது. அந்தப் பாம்பு பெண்ணின் கையை சுற்றிக் கொள்கிறது. அதன் பிறகு எந்த பயமும் இல்லாமல் மேற்கூரிலிருந்து பாம்பை அந்த பெண் கையால் பிடித்து வெளியே எடுக்கிறார்.

அந்த பாம்பு இந்த பெண்ணை எதுவும் செய்யவில்லை. மொத்தம் இரண்டு பாம்புகளை அவர் அசாதாரணமாகப் பிடிக்கிறார். இந்தப் பெண்ணும் அந்த பாம்புகளை பிடிக்கும்போது எந்த சலனத்தையும் காட்டவில்லை. ஏதோ வீட்டில் உள்ள குழந்தையை நாம் தூக்குவது போல அசால்டாக பாம்பை வெளியே இழுக்கிறார். 

இந்த காணொளி நாதன் ஸ்டான்போர்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த காணொளியை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதைப் பார்த்த இணையதள வாசிகள் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டி வரும் நிலையில், "இதனால்தான் நான் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதில்லை" என்றும், "ஆஸ்திரேலியார்கள் வித்தியாசமாக இருக்கிறார்கள்" என்றும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் உண்மை என்னவென்றால், அவர் அந்த பாம்புகளை செல்லப்பிராணிகளாக வளர்கிறார். அதனாலேயே எந்த சலனமும் இன்றி அவரால் அந்த பாம்புகளைப் பிடிக்க முடிகிறது. இருப்பினும் இந்த காணொளி பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

பெருமாளின் சயனத் திருக்கோலங்கள் தெரியுமா?

163 கைவினைக் கலைஞர்களால் நெய்யப்பட்ட ஆலியா பட்டின் சேலை!

ஹெல்மின்த்ஸ் பாராசைட் தெரியுமா உங்களுக்கு?

ஜப்பானில் நடத்தப்பட்ட 6G சோதனை… டேய் யாருடா நீங்கெல்லாம்? 

மதிப்பெண் குறைவா..! கவலை வேண்டாம்..!

SCROLL FOR NEXT