அமெரிக்காவில்ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை கடந்த மார்ச் மாதம் திவாலாகிய நிலையில் அமெரிக்காவில் 3 ஆவது பெரிய வங்கியாக உள்ள, First Republic Bank வங்கியும் திவாலாகியுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இரு பெரும் வங்கிகள் அடுத்தடுத்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள மற்ற வங்கிகளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கிகள் திவாலாகின. இந்நிலையில் FIRST REPUBLIC வங்கி திவாலானதாகவும் அந்த வங்கியை ஜே.பி.மோர்கன் வங்கி கையகப்படுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
FIRST REPUBLIC வங்கியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 19 லட்சம் கோடிகளாக (229 பில்லியன் அமெரிக்க டாலர்) உள்ள நிலையில், வாடிக்கையாளர் வைப்புத்தொகையில் $102 பில்லியன் இழந்து அந்த வங்கியின் 84 அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துகள் அனைத்தும் ஜே.பி.மோர்கன் வங்கியின் வசம் சென்றுள்ளன.
திங்களன்று ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி கைப்பற்றப் பட்டதாகவும், இரண்டு மாதங்களில் இந்த மூன்றாவது பெரிய அமெரிக்க நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் & கோ நிறுவனத்திற்கு வங்கியை விற்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயர்வு, வாராக்கடன் அதிகரிப்பு, வருவாய் குறைவு உள்ளிட்ட காரணங்களால் FIRST REPUBLIC வங்கி திவாலாகி உள்ளதாக வங்கித்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.