செய்திகள்

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு!

கல்கி டெஸ்க்

சென்னையில் பத்துகளுக்கு மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர், பாரிமுனை, ஆர்.ஏ.புரம் மற்றும் கோபாலபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பியல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த செய்தியை அறிந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை அழைத்துவர பள்ளிகளுக்கு படையெடுத்தனர். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் சார்பில் மோப்ப நாய் உதவியுடன் பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,” சென்னையில் மொத்தம் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்கள் ஒரே ஐடியில் இருந்துதான் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளிதான். பொதுமக்களை, குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் மிரட்டல் விடுத்த மிரட்டல் விடுத்த நபர்கள் யார் என்பது குறித்து வழக்கு பதிவுச் செய்யப்பட்டு விசாரணை செய்துவருகிறோம்” என்றார்.

இந்த விவாகரம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகளை தொடர்ப்புக்கொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,”வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டுள்ளதாக ” தெரிவித்துள்ளார்.

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

SCROLL FOR NEXT