செய்திகள்

ஆம்னி பஸ்களில் முன்பதிவுக் கட்டணம் உயர்வு!

கல்கி டெஸ்க்

தமிழகத்தில் தனியார் ஆம்னி பஸ்களில் முன்பதிவு கட்டணம் இரு மடங்காக உயர்த்தி உள்ளதையடுத்து பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில்,  பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர் ,திருநெல்வேலி, நாகர்கோவில் திருச்செந்தூர் ஊர்களுக்குச் செல்ல தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட்டின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்ததாவது;

தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி வருவதாக பொதுமக்கலிடமிருந்து புகார்கள் வருகின்றன. அப்படி கட்டணத்தை உயர்த்தி இருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு அதிகபட்சமாக ரூ. 3200, திருநெல்வேலிக்கு  அதிகபட்சமாக ரூ. 3950, மதுரைக்கு ரூ. 2000 வரை ஆம்னி பஸ் கட்டணங்கல் உயர்த்தப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட ஊர்களுக்குச் செல்லும் பஸ்களின் கட்டணமானது இரண்டு முதல் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT