முன்னாள் அமைச்சர் 
 ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்!

கல்கி டெஸ்க்

சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த  வழக்கை திரும்ப பெற்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்த என விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரி, ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டெய்ரிஸ் ஆகிய மூன்று தனியார் பால் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த  2017-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதிச் சேஷாசாயி, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாக ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு ராஜேந்திர பாலாஜிக்கு தடை விதித்திருந்தார். பின்னர் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சேஷாசாயி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக தனியார் பால் நிறுவனங்கள் தெரிவித்தன.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தனியார் பால் நிறுவனங்கள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT