செய்திகள்

பிரதமர் மோடியை தவறாக விமர்சிப்பதுதான் ராகுல் காந்தியின் ஒரே வேலையாகிவிட்டது - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ காட்டம்!

ஜெ. ராம்கி

இந்தியாவாக இருந்தாலும் வெளிநாடாக இருந்தாலும் ராகுல் காந்தியின் ஒரே வேலை, பிரதமர் மோடி மீது அவதூறு செய்வதாகவே இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடி மீதுள்ள வெறுப்பில், இந்தியாவுக்கு எதிராகவே ராகுல் காந்தி பேச ஆரம்பித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லண்டனுக்கு சென்ற ராகுல் காந்தியின் பயணம் சர்ச்சையானது. லண்டனில் மாணவர்கள் மத்தியில் பேசியபோது, இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக ராகுல் காந்திய பேசிய பேச்சு, இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயண்ம் செய்துள்ள ராகுல் காந்தி, அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசும்போது இந்தியாவில் சிறுபான்மையினருக்கும் தலித் மக்களும் ஆதரவற்று இருப்பதாகவும், கோபம், வெறுப்பு, கர்வம் கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் பா.ஜ.கவில்தான் இருப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அன்றாட பிரச்னைகளை சமாளிக்க மோடி அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை புரிந்து கொள்ள மறுக்கிறது. ஆதிக்க சிந்தனையோடு, செங்கோல் மனோபாவம் கொண்டவர்களிடம் நாம் வேறு எதனையும் எப்படி எதிர்பார்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு பற்றி கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்தியாவோ அல்லது வெளிநாடோ எங்கே சென்றாலும் நம்முடைய பிரதமர் மோடியை தவறாக விமர்சனம் செய்வதுதான் ராகுல் காந்தியின் வேலையாகிவிட்டது என்றார். பிரதமர் மோடியை இந்தளவுக்கு அவர் ஏன் வெறுக்கிறார்? நாட்டுக்கு எதிராக ஏன் பேசுகிறார்? என்று யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ராயல் குடும்பத்தில் இருந்து வராமல், சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராகிவிட்டார் என்பதை ராகுல் காந்தியால் சகித்துக் கொள்ளவே முடியிவில்லை. அவருடைய பேச்சு இனி எடுபடப்போவதில்லை. அவரது பேச்சுகளையும் வெறுப்புணர்வை தூண்டும் விமர்சனங்களையும் மக்கள் கண்டுகொள்ளப்போவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் ராகுல் காந்தி பேசப்போகும் விஷயங்கள், இந்தியாவில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை

தத்துவஞானி சுன் சூ பற்றிய தகவலும்-மிகச் சிறந்த பொன் மொழிகளும்!

உணவுத் தரக் குறியீட்டில் ஹைதராபாத்திற்கு கடைசி இடம் - NCRB அறிக்கை

நெல்லூர் போண்டாவும், ஜவ்வரிசி அல்வாவும் - செம டேஸ்ட் போங்க!

இந்தியர்களிடம் 100 கோடி மோசடி செய்த சீன நாட்டவர் அதிரடியாக கைது!

ஆணோ பெண்ணோ... 50 வயது ஆகிவிட்டதா? எலும்பு சத்து குறைபாடு வருமே!

SCROLL FOR NEXT