செய்திகள்

சிகிச்சை அளித்து காப்பாற்றிய நபர்.. நன்றி மறக்காமல் வீடு தேடி வரும் காகம்!

விஜி

புதுச்சேரியில் சிகிச்சை அளித்தவரை 6 மாதங்களாய் தேடி வரும் காகம் அவரது தோளில் அமர்ந்து சகஜமாய் பழகும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் ’கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுளளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு காகம் ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதனை மீட்ட ராஜா, காகத்திற்கு சிகிச்சை அளித்து உணவு அளித்துள்ளார். இதனால் நன்றி மறவாத அந்த காகம், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்துள்ளது. இதனை பார்த்த அவர் உடனடியாக அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது விருந்தாளியாக வந்த காகத்திடம் பேசிய அவர், யாரை தேடி வந்திருக்கீங்க, என கொஞ்சினார். பேசி கொண்டிருந்த போதே திடீரென அந்த காகம் அவரது சட்டை பட்டனை பிடித்தபடி அமர்ந்து கொண்டது.

தொடர்ந்து கிளி ஒருவருடன் நெருங்கி பழகுவது போல் முத்தமிட்டு கொஞ்சி விளையாடியது. அவரும் காகத்திற்கு முத்தமிட்டு பேசினார். தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அந்த காகம் பறந்து சென்றது.

பொதுவாகவே சாப்பாடு வைக்க சென்றாலே பறந்து ஓடும் காகம் ஒருவரை கொஞ்சுவது அதிசயமாக இருப்பதாக வீடியோவை பார்த்த பலர் பதவிட்டு வருகிறார்கள்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT