செய்திகள்

வீட்டுப் பணியாளர்கள் தங்கள் எஜமானர்களிடமே திருடுவதன் பின்னால் உள்ள உளவியல் என்ன தெரியுமா?

கிரி கணபதி

மீபத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில், பணிப்பெண் நகைகளைத் திருடியது பற்றிய செய்தியை அறிந்திருப்பீர்கள். இதன் பின்னால் இருக்கும் உளவியல் காரணத்தை இந்த பதிவில் காணலாம். 

பணியாட்கள் தாங்கள் வேலை செய்யும் வீட்டில் திருடுவது ஒன்றும் புதிய செயல் அல்ல. காலம் காலமாக இது போன்ற சம்பவங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். இருப்பினும் இந்த தவறான நடத்தைகளுக்கு பின்னால் உள்ள உளவியலை நாம் கவனிப்பதில்லை அல்லது தவறாகப் புரிந்துகொள்கிறோம். 

ஒருவர் தான் வேலை செய்யும் இடத்திலேயே திருடி ஏன் தன் வேலையையும், நற்பெயரையும் சுதந்திரத்தையும் பணயம் வைக்க வேண்டும்?  

இதோ அதற்கான சில உளவியல் காரணிகள்;

  1. ங்களின் ஆதிக்கத்தை உணர சில பணியாளர்கள் முதலாளிகளிடமே திருடுகிறார்கள். பெரும்பாலான வர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் சக்தியற்றவர்களாகவும், கீழ்படுத்தப்பட்ட நிலையிலும் தனது எஜமானர்களால் நடத்தப்படுகிறார்கள். இப்படியான சூழல்களில் தங்களை மனதளவில் சக்தி மிக்கவர்களாக உணரச்செய்ய வேலை செய்யும் இடத்திலேயே திருடுவது அவர்களுக்கு பலனளிக்குமாம்.

  2. ரண்டாவது காரணம் அப்பணியாளர்களுக்கான உரிமை உணர்வு. சிலர் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவதாக உணர்ந்தால் இத்தகைய திருட்டு சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. 

  3. சில பணி ஆட்களுக்கு தன் வாழ்வில் நிதி சிக்கல்கள் அதிகமாக இருக்கும். இதுபோன்ற சூழலில், தங்கள் முதலாளியிடம் இருந்து திருடுவது அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என நினைக்கலாம். முதலாளிகள் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பதால் சில பொருட்களை இழந்தால் கூட அவர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனை வந்துவிடப் போவதில்லை என நினைத்து, தன் எண்ணத்தையும் செயலையும் நியாயப்படுத்துவார்கள். 

  4. திரில் அனுபவத்திற்காகவும் சிலர் திருடுகிறார்களாம். முதலாளி வீட்டில் திருடுவது அவர்களுக்கு உற்சாகத்தையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்த வழிவகுக்கிறது. தனக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை எடுக்கும் பொழுது கிடைக்கும் உணர்வு மற்றும் அட்ரீனலின் சுரப்பை அவர்கள் ரசித்து அனுபவிப்பார்கள். 

  5. சில சமயங்களில் இவர்கள் இவ்வாறு திருடுவது கிளெப்டோமேனியா என்ற உளவியல் கோளாறாகக் கூட இருக்கலாம். ஒரு பொருளை திருடுவதற்கான தவிர்க்க முடியாத தூண்டுதலை ஏற்படுத்துவதுதான் கிளெப்டோமேனியா என்ற மனநலக் கோளாறு. 

பெரும்பாலும், மேற்கூறிய ஐந்து காரணிகளில் ஏதோ ஒரு காரணம்தான் பணியாட்கள் தாங்கள் பணிபுரியும் எஜமானர் வீட்டிலேயே திருடுவதற்கு தூண்டுதலாக அமைகிறது. இதில் பெரும்பாலும் பணம் சார்ந்த தேவையோ அல்லது பணத்தாசையோதான் திருடுவதற்கு துண்டுகோலாக அமைகிறது. 

பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு நல்ல உதாரணம் தான் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு சம்பவம்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT