Arnold
Arnold 
செய்திகள்

எலான் மஸ்க்கை முந்தினார் பெர்னார்ட் அர்னால்டு!

கல்கி டெஸ்க்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்ககை முந்தினார். உலகின் முதல் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

உலகின் முன்னணி ஆடை விற்பனையகம் ‎LVMH - Louis vuitton நடத்தி வரும் பிரான்ஸ் நாட்டு தொழில் அதிபர் பர்னார்ட் அர்னால்ட் உலகின் டாப் பணக்கார்களில் முதலிடம் பிடித்துள்ள இவரது சொத்து மதிப்பு ரூ.15.29 லட்சம் கோடியாகும்.

அதற்கு முன்பு 246 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன், எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் என்ற இடத்தில இருந்தார். அவரது நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை மிகப் பெரியது. அவர் சமீபத்தில் ட்விட்டரை வாங்கியதற்காகத் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

elan musk

பெர்னார்ட் அர்னால்ட் உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் நிறுவனமான LVMH Mot Hennessy - Louis Vuitton SE இன் தலைவர் மற்றும் CEO. அர்னால்ட் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு $156 பில்லியன் டாலர்கள். இவர் உலகின் இரண்டாவது பணக்காராக இருந்தார்.

சமீபத்தில், எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3 ½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியதுடன், பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இது உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்பின்னர், டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை அவர் விற்றுத் தான் டுவிட்டர் நிறுவனத்தின் மீது ரூ.3 ½ லட்சம் கோடி முதலீடு செய்தார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரது சொத்து மதிப்பு ரூ.15.28 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து பெர்னார்ட் அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT