செய்திகள்

நந்தினிக்குத் தங்கப் பேனா! கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

கார்த்திகா வாசுதேவன்

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் (600/600) பெற்று தமிழகம் முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறார் மாணவி நந்தினி. திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினியி தந்தை ஒரு தச்சுத் தொழிலாளி. ஆயினும் மாணவி நந்தினி தனது கற்றலுக்கான ஊக்கத்தை தானே உருவாக்கிக் கொண்ட திறமை மிகுந்த மாணவியாக இருந்தார். அவரே கூறியபடி, 12 ஆம் வகுப்பு படிக்கும் போது தன்னை சுற்றி இருந்த பிற மாணவிகளின் செயல்பாடுகள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரம் செல்விட தன்னையும் தூண்டியதாகவும் ஆனால், நந்தினி தான் வகுத்துக் கொண்ட இலக்கை அடைய வேண்டும் என்ற முனைப்பில் தனக்குத் தானே கட்டுப்பாடுகள் வகுத்துக் கொண்டு தனியாக டியூசன் எதுவு வைத்துக் கொள்ளாமல் பயின்று இன்றுமுழு மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார். இத்தகைய மாணவிகளே அடுத்து வரும் இளம் தலைமுறையினருக்கு உதாரணமாகத் திகழக்கூடியவர்கள். எனவே அவர்களை ஊக்குவிப்பது அரசு மற்றும் நம் அனைவரின் கடமையும் ஆகும்.

அந்த வகையில் இன்று மாணவி நந்தினியை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து பாராட்டியதோடு எதிர்காலத்தில் அவருக்கு கல்வி ரீதியாக எந்த உதவி தேவைப் பட்டாலும் தம்மை அணுக வேண்டும் என்றும். மாணவியின் உயர்கல்விச் செலவுகளை அரசே பார்த்துக் கொள்ளும் என்றும் உறுதி அளித்திருந்தார். மாணவி நந்தினிக்கு முதல்வரிடம் இருந்து மட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இருந்தும் உதவிகளும், பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து தம் பங்குக்கு மாணவிக்கு தங்கப் பேனா பரிசு அளிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். திண்டுக்கல்லுக்கு நேரில் சென்று மாணவியைச் சந்தித்து இந்தப் பேனாவை அவருக்கு அன்பளிப்பாக அளிக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார். தங்கப் பேனா அண்மையில் அவருக்கு அன்பளிப்பாக கிடைத்த பேனா என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவி செய்த சாதனையானது இதுவரை யாரும் செய்யாத ஒரு செயற்கரிய சாதனையாகும்.

எனவே கவிஞர் வைரமுத்து அறிவிப்பில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

SCROLL FOR NEXT