செய்திகள்

தேர்தல் ஆணையர் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக வெ.பழனிகுமார் பதவியில் இருந்து வருகிறார். தமிழ்நாட்டின் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி என ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துகின்ற தன்னாட்சி அமைப்பு தமிழ்நாடு தேர்தல் ஆணையம்.

இந்த தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையத்துக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையராக தமிழ்நாடு ஆளுநரால் நியமிக்கப்பட்டார் வெ.பழனிகுமார்.

தேர்தல் ஆணையர் பழனிக்குமாரின் பதவிக் காலம் இம்மாத இறுதியோடு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், அவரது பதவிக் காலத்தை வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி வரை நீட்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டு இருக்கிறார். அதற்கான உத்தரவையும் பழனிக்குமாருக்கு தமிழ்நாடு ஆளுநர் வழங்கி உள்ளார்.

சென்ற 2021ம் ஆண்டு தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பழனிக்குமார், கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களையும் சிறப்பாக நடத்தி முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT