இலங்கையின் 16வது பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவரே இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராவார்.
இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசாநாயக ஆவார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் கட்சி வெற்றிபெற்றது. இதனையடுத்து இரண்டாவது இடத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச பிடித்தார். மற்றும் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்தைப் பிடித்தார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2வது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இலங்கை வரலாற்றிலேயே இரண்டாவது முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது இதுவே முதல்முறையாகும்.
இதனையடுத்துதான் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக வெற்றிபெற்றது உறுதியானது. இவர் பதிவியேற்ற நிலையில், பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகினார். பிரதமர் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் அமைச்சர் பதவியை விட்டு விலகினர். புதிய அதிபருக்கு நெருக்கமானோர் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வந்தன.
இதனையடுத்து இன்று தேசிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இலங்கை வரலாற்றிலேயே மூன்றாவது பெண் பிரதமராவார். ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க முன்னிலையில் ஹரிணி அமரசூரியா இன்று பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்ற பெருமையையும் ஹரிணி அமரசூரியா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க, அவரது மகள் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்த பெண்களாவர்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ரணில் விக்கிரமசிங்கே பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.