செய்திகள்

மேய்ச்சல் நிலமாக்கப்பட்டு விட்டதா மெளரியர்கள் காலத்து ஸ்தூபி!

கார்த்திகா வாசுதேவன்

அந்த இடத்தைப் பார்த்தால், அது ஒரு மேடு அல்லது சிறிய குன்று போல தோற்றமளிக்கிறது, புல் படர்ந்து கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. குழந்தைகள் குன்றின் மீது ஏறி இறங்கி ஓடுகிறார்கள், கீழே இருப்பது இந்தியாவின் கடந்த கால பொக்கிஷங்களில் ஒன்று என்பதை உணராமல் ஒருவர் அதைக் கடந்து செல்கிறார். அது சாஞ்சியில் உள்ள மௌரிய கால ஸ்தூபிக்கு முந்தையது என்பதைப் பற்றிய அக்கறை அங்கு எவருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

இது , கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது, இந்த ஸ்தூபி ஒரு ரகசியம் அல்ல, ஆனால் அக்கறையின்மைக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இது ஒரு குன்று போல் காட்சியளிக்கிறது.

சாஞ்சி ஸ்தூபியிலிருந்து 500 கிமீ தொலைவில் உள்ள ரேவா மாவட்டத்தின் தேவூர் கோதர் கிராமம் என்றும் அழைக்கப்படும் தியோர்கோதரில் அமைந்துள்ள இந்த ஸ்தூபி 1982 ஆம் ஆண்டு ASI போபாலில் இருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஃபானி காந்தா மிஸ்ராவால் கண்டுபிடிக்கப்பட்டது. "இந்த ஸ்தூபி சாஞ்சி ஸ்தூபிக்கு முந்தையது, என பிராமி கல்வெட்டுகள் மற்றும் தூணின் எஞ்சிய பாகங்களும் சொல்கின்றன. மேலும் இது சாரநாத்துக்கும் சாஞ்சிக்கும் இடையே உள்ள மையப் புள்ளியாகும்" என்று மிஸ்ரா ஊடகங்களிடம் கூறினார்.

ஏஎஸ்ஐ கிழக்கு பிராந்தியத்தின் பிராந்திய இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற 66 வயது தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மிஸ்ரா, தியோர்கோதர் ஸ்தூபியை அதன் மகிமைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனும் பெரும் கனவைக் கொண்டிருந்தார் . அவரது கனவு இன்னமும் ஆநிறைவேறாமல் இருப்பது வேதனையானது தான். மேலும் அவர் இப்போது கொல்கத்தாவில் உள்ள மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாரம்பரியக் கலத்தின் இயக்குநராக உள்ளார்.

இந்த தளம் வரலாற்று முக்கித்துவம் நிறைந்தது - இங்கு நான்கு மடங்கள், 33 ஸ்தூபிகள் மற்றும் 63 பாறை தங்குமிடங்கள் உள்ளன; மௌரியர் காலத்தின் பிரசித்தி பெற்ற பளபளப்பான கரு நிறத்து உலோகப் பொருட்கள் இங்கு தோண்டி எடுக்கப்பட்டுள்ளன, மேலும் ஒரு பழங்கால பாதை மற்றும் பிராமி கல்வெட்டுடன் ஒரு மௌரிய கால தூண் இங்கு உள்ளது. இங்குள்ள 9 மீட்டர் உயரம் கொண்ட முக்கிய ஸ்தூபி செங்கற்களால் ஆனது. இதுவும் மற்ற மூன்று செங்கல் ஸ்தூபிகளும் பெளத்த துறவு மையத்தின் கருக்களை உருவாக்குகின்றன. மற்ற ஸ்தூபிகள் பாறையால் செய்யப்பட்டவை.

கடைசியாக 1999-2000 ஆம் ஆண்டில் இங்கு அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன, ஆனால் அறிக்கை இன்னும் நிலுவையில் உள்ளது. அதன்பிறகு, பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

ஏஎஸ்ஐ-ஜபல்பூர் வட்டம் இங்கு ஒரு தனி காவலரை நியமித்துள்ளது. அவ்வளவு தான். அதன் பிறகு நாங்கள் அங்கு எந்த வேலையும் செய்யப்படுவதை நாங்கள் காணவில்லை. உள்ளூர் கிராமவாசி ஒருவர் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார், என்று தியோர் கோதர் பஞ்சாயத்து செயலாளர் ராம் சரண் யாதவ் ஊடகங்களிடம் கூறினார்.

அரசு மற்றும் துறை ரீதியான புறக்கணிப்பால் மன உளைச்சலுக்கு ஆளான டாக்டர் மிஸ்ரா, "இந்திய அரசாங்கம் இதன் பாதுகாப்பை உறுதி செய்ய இதை ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாக முன்னெடுக்க வேண்டும். அதற்கான அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்பட வேண்டும். நான் நான்கு ஆண்டுகளாக ASI க்கு கடிதம் எழுத அனுமதி கோரி வருகிறேன். எத்தனை விதமாகப் புகாரளித்தாலும் பலனில்லை."

- என்று தெரிவித்திருந்தார்.

மெளரியர்கள் காலத்துக்கும் முந்தைய இந்த ஸ்தூபி இருக்குமிடம் பாதுகாக்கப்பட்டு அரசின் பாரம்பரியச் சின்னங்களின் கீழ் கொண்டு வரப்படுமா என்பதைப் பொருத்திருந்து தான் காண வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்.

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

SCROLL FOR NEXT