Fiona Storm  
செய்திகள்

பியோனா புயல் தாக்கி வெள்ளக்காடான கனடா!

கல்கி டெஸ்க்

ட்லாண்டிக் கடலில் உருவாகி கனடாவை தாக்கிய பியோனா புயலால் அந்நாடு வெள்ளக்காடாய் மாறியுள்ளது.

-இதுகுறித்து கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

கனடாவைத் தாக்கிய சக்திவாய்ந்த பியோனா புயலால் நோவா ஸ்கோடியா மற்றும் பிரின்ஸ் எட்வர்டு தீவுகள் ஆகிவரை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன இப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. மேலும் நியூபவுன்ட்லேன்ட் மற்றும் லாப்ரடார் ஆகிய ஊர்களும் இந்த சூறாவளியால் கடுமையாக பாதிக்கப் பட்டு, மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டனர்.

இந்த புயல் சேதங்களுக்கான மீட்பு நடவடிக்கையில் ராணுவம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் செல்லவிருந்தார் கனடா அதிபர் ஜஸ்டின் டிரூடோ. இப்போது தன் நாட்டின் புயல் பாதிப்பு காரணமாக அந்த பயண திட்டத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.                   .

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

SCROLL FOR NEXT