செய்திகள்

இங்கிலாந்தின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியர்!

S CHANDRA MOULI

அண்மையில் பிரிட்டனின் பில்லியனர்களின் பட்டியல் வெளியானது. அந்தப் பட்டியலில் மொத்தம் 171 பில்லியனர்கள் இருக்கிறார்கள். அதில் இடம் பெற்றுள்ள மிகவும் செழிப்பான பில்லியனர்கள் வரிசையில் முதல் இடம் பெற்றிருப்பது ஒரு இந்தியக் குடும்பம் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். அது ஹிந்துஜா குடும்பம்தான்! அவர்களின் சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். கடந்த ஆண்டின் பட்டியலிலும் இவர்களே முதலிடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருப்பவர் ரிஷ் சுனக். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனர்களான நாராயண மூர்த்தி-சுதா நாராயண மூர்த்தி ஆகியோரின் மாப்பிள்ளை என்பது கூடுதல் தகவல்.

ரிஷி சுனக்கின் மனைவியும், நாராயண மூர்த்தி தம்பதியரின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் வைத்திருக்கிறார். இவர் வசம் இருந்த பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஆண்டின் துவக்கத்தில் சுமார் 7500 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களின் காரணமாக அக்ஷதா மூர்த்தி வைத்திருந்த இன்ஃபோசிஸ் பங்குகளில் மதிப்பு மட மடவென்று சரிந்தது.

கடந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, அந்தப் பங்குகளின் மதிப்பு ஐந்தில் ஒரு பங்கு அளவுக்கு இறங்கிவிட்டது. அதாவது, அவர்களின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2000 கோடி ரூபாய் அளவுக்கு இறக்கம் கண்டது. இதன்காரணமாக பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனோக் மற்றும் அவருடைய மனைவியின் சொத்து மதிப்பு ரூபாய் 5500 கோடி அளவுக்குக் குறைந்துவிட்டது.

இந்த மதிப்பு இறக்கம், பிரிட்டனில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி, பிரிட்டிஷ் மீடியாவில் பேசு பொருள் ஆகியுள்ளது.

அந்தப் கொழுத்த பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளவர் ரசாயனத் தொழில்துறை சூறாவளி என அழைக்கப்படும் சர் ஜிம் ரட்கிளிஃப். இவர், நம் ஊர் செல்வந்தர்கள் ஐ.பி.எல்.அணிகளை வாங்குவதைப் போல, இங்கிலாந்தின் மிகப்பிரபலமான மான்செஸ்டர் யுனைட்டட் அணியை வாங்குவது இவரது லட்சியமாக உள்ளது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT