சாலையில் போக்குவரத்து நெரிசல், மூடப்பட்ட சாலைகள் போன்றவை ஏற்பட்டால், உடனடியாக மாற்றுபாதை வழியாக செல்ல உதவும் வகையில் Road Ease என்ற புதிய செயலியை காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது.
இதை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்துப் பேசியதாவது;
சாலை போக்குவரத்து நெரிசலின்போது, இந்த செயலி வழியாக மாற்று சாலையை கண்டறிந்து அதன்வழியாகச் செல்லலாம். இந்த ‘ரோட் ஈஸ்’ செயலியானது கூகுள் மேப் உதவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
15 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த செயலி அப்டேட் ஆகும் வசதி கொண்டது. இந்த செயலி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல எவ்வளவு நேரமாகும், வழியில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம், சாலை முடக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிந்துக்கொள்ளலாம்.’’
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.