செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலர் பலி!

கல்கி

இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் மலேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை 2.24 மணியளவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

-இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாவது:

இன்று அதிகாலையில் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மக்கள்தொகை அதிகமுள்ள பகுதி என்பதால் உயிர்ச்சேதம் அதிகமிருக்கும் என்று கருதப் படுகிறது.

-இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் பலியானதாகவும் அங்கு பக்திகா மாகாணத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி தெரிவித்துள்ளார். இந்த நிலநடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இதே போல நள்ளிரவில் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூர் அருகே  5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

அதேபோல இந்தியாவில் நேற்றிரவு குஜராத்தில் வல்லபாய் படேல் சிலைக்கு அருகே 3.1 ரிக்டர் அல்வில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT