புயல் 
செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் மாண்டஸ்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கல்கி டெஸ்க்

மாண்டஸ் புயல் (Cyclone Mandous) காரணமாக கனமழை எச்சரிக்கையால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற புயலாக இன்று வலுப்பெறுகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை மறுதினம் அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

கனமழை

தற்போது வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் (Cyclone Mandous) தமிழத்தில் இன்று முதல் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கன மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாநிலமெங்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன.

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

கடின உழைப்பே தன்னிறைவான வாழ்க்கைக்கு வழி!

SCROLL FOR NEXT