செய்திகள்

மிஸ் இந்தியா - சாதனை படைத்த செங்கல்பட்டு மங்கை.

கல்கி டெஸ்க்

“ஃபாரெவர் மிஸ் இந்தியா அழகிப் போட்டி- 2022”ல் கலந்துக் கொண்டு இரண்டாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரக்சயா.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர்   ரக்சயா (20), கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.  இவர் தன்னுடைய சிறு வயது முதலே  அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு இருந்துள்ளார். இவரது தந்தை மனோகர் ஒரு கட்டிட தொழிலாளி.

குடும்பம் வறுமையில் இருந்த போதிலும் அதை ஒரு தடையாக கருதாமல், கடுமையாக உழைத்து, பகுதி நேர வேலை செய்து தனது சொந்த முயற்சியில் அழகிப் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்துள்ளார்.   

கடந்த 2018ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற ரக்சயாவை அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் Forever star india awards நடத்திய மாவட்ட அளவிலான அழகிகள் போட்டியில் தேர்வாகி பின்னர் மாநில அளவிலான போட்டி ஜெய்பூரில் இந்த மாதம் 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை வரை நடந்தது.

இப்போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் ரக்சயா “மிஸ் தமிழ்நாடு” பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் வின்னர், ரன்னர் என சுமார் 750 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி இருந்தனர்.

டிசம்பரில் நடக்கும் “மிஸ் இந்தியா“ அழகிப்போட்டியில் இந்தியா முழுவதும் தேர்வாகிய வின்னர், ரன்னர் என அனைவரும்  ஸ்டேஜ் ஷோ செய்ய வேண்டும். இதில் தேர்வாகும் நபர் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில், ஜெய்ப்பூரில் கடந்த 19 ஆம் தேதி “மிஸ் இந்தியா“ இறுதிப் போட்டி நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் கலந்துகொண்டனர்.

ஃபாரெவர் மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் கலந்துக்கொண்ட ரக்சயா இரண்டாவது இடத்தை பிடித்து தமிழ் நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

“நிச்சயம் போட்டியில் முதல் இடத்தை தட்டிச் செல்வேன்” என்று நம்பிக்கையோடு இருந்த ரக்சயாவால்  இரண்டாம் இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது என்றாலும் அவரது மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் பாராட்டுவோம்.

சிறுகதை: லட்டு தின்ன ஆசையா? யாருக்கு?

சோறு கண்ட இடம் சொர்க்கம் - ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் விபரம் தெரியுமா?

உடலுக்கு சூப்பர் சுகம் தரும் சுக்கு பாலின் ஆரோக்கிய நன்மைகள்!

வயசானாலும் இளமையாத் தெரியணுமா? அப்போ உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கோங்க..

எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணாக்கியது தோனி, விராட், ரோகித்தான் – சஞ்சு சாம்சன் தந்தை முன்வைத்த பகீர் குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT