செய்திகள்

தேசிய பட்டர் க்ரஞ்ச் தினம்!

கல்கி டெஸ்க்

இன்று தேசிய பட்டர் க்ரஞ்ச் தினம். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 20 பட்டர் க்ரஞ்ச் தினம் கொண்டப்படுகிறது. பட்டர் க்ரஞ்ச் என்பது சாக்லேட்டால் மூடப்பட்ட டோஃபியின் கலவையாகும். இது முறுமுறுப்பான அமைப்பு மற்றும் கேரமல் சுவை கொண்டது. இது ஐஸ்கிரீம் மீது பரிமாறவும் அல்லது கேக்குகள் மற்றும் குக்கீகளில் அலங்காரமாக சேர்க்கவும்.

அமெரிக்கர்களின் அதிகாரபூர்வமற்ற உணவுத் திருவிழா இது. பட்டர் க்ரஞ்ச் என்னும் பிஸ்கட் ரசிகர்களால் கொண்டாடப்படும் தினமாகும். இனிப்புப் பண்டங்களுடன் சாக்லெட்டைக் கலந்து தயாரிக்கப்படும் தின்பண்டம் தான் பட்டர் க்ரஞ்ச். மொறுமொறுப்பும் இனிய நறுமணமும் கொண்டது. சுவைக்காக ஆல்மண்ட், பிஸ்தா போன்றவற்றையும் சேர்த்தால் ஆஹா ஓஹோதான் போங்கள்!

ஐஸ்கிரீமுடன் சேர்த்தோ அல்லது அப்படியேவோ சாப்பிடலாம். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் அமெரிக்க சிப்பாய்களுக்காக இது டின்களில் அடைத்துப் போர்முனைக்கு அனுப்பப்பட்டதாம்!

தேசிய பட்டர்கிரஞ்ச் தினத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது:

ஜனவரி 20 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள சில பட்டர் கிரஞ்ச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்தமான இனிப்பு வகைகளில் சிலவற்றைத் தூவவும் அல்லது உங்கள் காலைக் காபிக்கு ஒரு பட்டர் க்ரஞ்ச் சுவையுள்ள க்ரீமரைத் தேடவும்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT