National level rangoli competition
National level rangoli competition 
செய்திகள்

தேசிய அளவிலான கோலப்போட்டி! 

கல்கி டெஸ்க்

-லலிதாம்பிகை

இந்தியாவின் 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மத்திய அரசு பல்வேறு போட்டிகளை நடத்தியது. அதில் பாண்டிச்சேரியை சேர்ந்த கோலமயில் மாலதி செல்வம் மாநில அளவிலான ரங்கோலி போட்டியில் முதல் பரிசை தட்டி சென்றுள்ளார்.

பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ்பெண்ணான கலைமாமணி மாலதி செல்வம் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் தனது திறமைகளை காட்டியவர்.

kalaimamani malathi

தற்போது மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு பெற்று தற்போது மாநில அளவிலான கோலப்போட்டியில் வெற்றி பெற்று ரூபாய் ஒரு லட்சம் (1,00,000/-) பரிசினை பெற்றிருக்கிறார். இரண்டாவது பரிசு சிவாங்கி கருணாமூர்த்தி ரூபாய் 75000/- மும், பாலாஜி லாஸ்யா மூன்றாவது பரிசாக ரூபாய் 50,000/- பரிசாக வென்றுள்ளனர்.

முன்னதாக இந்த போட்டிக்காக ஆன்லைன் மூலம் கோலங்கள் பெறப்பட்டன. இதல் சுமார் 800/- மேற்பட்ட கோலங்களை வரைந்து அனுப்பியிருந்தனர். அதிலிருந்து பரிசுக்குரியவர்களை தேர்வு செய்து இணையத்தில் வெளியிடப்பட்டது.

rangoli art

இதற்கு அடுத்தபடியாக  நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

மாநில அளவில் வென்றவர்கள் டெல்லியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசை  தட்டி வர ஆர்வமாக உள்ளனர்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT