News 5 
செய்திகள்

News 5 – (05-09-2024) பெண்கள் பாதுகாப்பு குறித்து பரவும் செய்தி தவறானது - TN Fact Check!

கல்கி டெஸ்க்

முதலீடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த தகவல்!

CM M.K.Stalin

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் டிரில்லியன் நிறுவனத்துடன் ₹2000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. Nike நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவாக்கம் செய்வது, சென்னையில் ஒரு தயாரிப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருச்சி, மதுரையில் Optum நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்வது குறித்தும் அலோசிக்கப்பட்டது” என முதலீடுகள் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 8வது சீசனை  தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi, Bigg Boss 8

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்குகிறார் விஜய் சேதுபதி. பிக் பாஸ் சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பரவும் செய்தி தவறானது - TN Fact Check!

TN Fact Check

சென்னையில், பாதுகாப்பு குறைவான பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக பயணிக்க வேண்டிய பெண்கள் போலீஸாரின் வாகனங்களில் தங்கள் பகுதிகளுக்கு செல்லும் திட்டம் கடந்தாண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்தில், கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, 1091 என்ற எண் மூலம் காவல்துறை உதவியை பெண்கள் பெற முடியும் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்நிலையில், இந்த செய்தி தவறானது, என TN Fact Check அமைப்பு அவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில், இத்திட்டத்தை பயன்படுத்த உரிய தொலைபேசி எண்களையும் (044-28447701, 044-23452365) தெரிவித்துள்ளது.

'The GOAT’ திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Actor Ajith, 'The GOAT' vijay

'The Greatest of All Time' - தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது நடிகர் விஜய்யின் தி கோட் திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜ்மல், மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், நடிகர் விஜய்க்கு நடிகர் அஜித் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளாதாக இயக்குனர் வெங்கட் பிரபு அவரது x தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதிக வருமான வரி செலுத்தும் விளையாட்டு வீரர்!

Virat Kohli

இந்தியாவிலியே அதிக வருமான வரி செலுத்தும் விளையாட்டு வீரராக விராட் கோலி உள்ளார். Fortune India வெளியிட்ட தகவலின்படி, கடந்த நிதியாண்டில் அவர் 66 கோடி வரி செலுத்தியுள்ளார்.

நைனாமலை பெருமாளை அறிவீர்களா?

உணவு அருந்திய பின் இனிப்பு சாப்பிடுவது சரியா? 

சிறுகதை – முகம்!

வீடுகளின் அடையாளம் BHK குறியீட்டு என்பது தெரியும்... 1RK என்றால் என்ன தெரியுமா?

“நான் ரொம்ப குண்டா இருக்கேன்னு பலர் என்னை கேலி செய்கிறார்கள்” – உலக அழகியே வேதனை!

SCROLL FOR NEXT