News 5 
செய்திகள்

News 5 – (20-08-2024) ரோபோக்களை கண்காணிக்கும் புதிய வேலை - டெஸ்லா அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயார் - எலான் மஸ்க்!

Elon Musk

அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எலான் மஸ்க்குக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படும் என டிரம்ப் தெரிவித்ததற்கு, பதிலளித்த  டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், டிரம்ப்பின் அழைப்பை ஏற்று நாட்டுக்குச் சேவையாற்ற தயாராக உள்ளதாக X  தளத்தில் அறிவித்துள்ளார்.

வேகமாக பரவிவரும் புதிய வகை குரங்கம்மை - 570 பேர் பலி!

Monkeypox

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வேகமாக பரவிவரும் புதிய வகை குரங்கம்மை வைரஸால் 570 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்படும் 100 பேரில் 3 பேர் மரணிப்பதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரோபோக்களை கண்காணிக்கும் புதிய வேலை - டெஸ்லா அறிவிப்பு!

New job Tesla announcement

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில், ரோபோக்களை கண்காணித்து தகவல்களை சேமிக்கும் Data Collection Operator வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை எனவும், ஒரு மணி நேரத்துக்கு ரூ.4,000 சம்பளம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tesla's Career page என்ற வலைத்தளபக்கத்தில் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோ பகுதியில் வேலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு 13 கிலோ வரை எடை தூக்கும் திறனும், நீண்ட நேரம் VR உபகரணங்களை இயக்கும் திறனும் கட்டாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்!

Vidamuyarchi

விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 4.33 மணிக்கு வெளியாகும் என தகவல் வெளிவந்த நிலையில், அறிவிக்கப்பட்ட நேரத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சஞ்சய் சாரா, நடிகர் தசரதி ஆகியோரின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் பிசிசிஐ-க்கு கூடுதலாக 5,000 கோடி!

IPL

ஒளிபரப்பு உரிமம் மூலமும், Sponsorship மூலமும் பிசிசிஐக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூலம் பிசிசிஐ-க்கு கூடுதலாக 5,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.11,769 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம். மாற்றி யோசிப்போமா நண்பர்களே!

சிவனின் அம்சமான முனீஸ்வரன் பற்றித் தெரியுமா?

இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

SCROLL FOR NEXT