சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமாண்டராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூமிக்குத் திரும்பும் வரை விண்வெளி நிலையத்தை சுனிதா வில்லியம்ஸ் வழிநடத்துவார் என நாசா அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தில் 160 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள புதிய பள்ளத்தை சந்திரயானின் பிரக்யான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. பழைமையான பள்ளத்தாக்கான எய்ட்கென் படுகையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் பிரக்யான் ரோவர் எடுத்த புகைப்படங்கள் மூலம் இப்பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகரின் ஒருசில பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி - மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மாநகரப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் நடைபெற்ற Amur Autumn சர்வதேச திரைப்பட விழாவில், Grand Prix பிரிவில், சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படம் விருது வென்றுள்ளது.
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில், இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகள் மற்றும் 71.67 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்ளது.