செய்திகள்

# BREAKING இனி அதிமுகவில் ஒற்றை தலைமை தான் : மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் அதிமுக அலுவகம் !

கல்கி டெஸ்க்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வெற்றிச்சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக அலுவலகத்திலும், கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள எடப்பாடி பழனிசாமி அவர்கள் இல்லத்திற்கு அருகிலும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளார் . அதிமுக அலுவலக வளாகத்தில் உள்ள MGR மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்தார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 11 ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஒபிஸ் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டது. ஓபிஎஸ் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது . உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டதால் அதிமுக அலுவலக வளாகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT