முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார். இவருக்கு வயது 95. நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரது வீட்டில் நேற்று 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது.முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு அவரசமாக பெரியகுளம் வந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவெய்திய செய்தி கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.