பாகிஸ்தான்
பாகிஸ்தான்  
செய்திகள்

கழுத்தை நெரிக்கும் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம்!

கல்கி டெஸ்க்

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடந்த சில நாட்களாகவே கடும் சரிவை சந்தித்துள்ளது. அதன் கடன் அளவு கழுத்தை நெரிக்கும் அளவுக்கு முழி பிதுங்கி வருகிறது பாகிஸ்தான் அரசு.

கடந்த ஒரு வருடத்தில் பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டு கடன் அளவு சுமார் 49.1 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்நாட்டு கடனில் பெரும் பகுதி அரசு பத்திரங்களில் வாங்கப்பட்ட கடனாக உள்ளது. இப்பிரிவு கடன் மட்டுமே 25 லட்சம் கோடி ரூபாய்.

இதற்கு மத்தியில் பாகிஸ்தான் நாடு அரசியல் பிரச்சனைகள், பொருளாதார பிரச்சனைகள், நாணய மதிப்பில் சரிவு, தொடர்ந்து சரிந்து வரும் அன்னிய நாணய இருப்பு என பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐஎம்எப் அமைப்பின் கடன் திட்டம் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் அதற்குள் எப்படியாவது இந்த 6.7 பில்லியன் டாலர் கடனை பெற வேண்டும் என எக்ஸ்டர்னல் பண்டிங் கேப் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து வருகிறது.

ஐஎம்எப் அமைப்பின் கடன் திட்டம் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் அதற்குள் எப்படியாவது இந்த 6.7 பில்லியன் டாலர் கடனை பெற வேண்டும் என எக்ஸ்டர்னல் பண்டிங் கேப் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தான் அரசின் மொத்த கடன் அளவு கடந்த ஒரு வருடத்தில் சுமார் 34.1 சதவீதம் அதிகரித்து 58.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் ரூபாய் என்பது பாகிஸ்தான் ரூபாய், டாலருக்கு எதிராக பாகிஸ்தான் ரூபாய் மோசமான நிலைக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இன்று 285.47 ரூபாயாக உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 36.4 சதவீதமாக உயர்ந்தது, பணவீக்கத்தின் அதிகப்படியான உயர்வுக்கு முக்கியமான காரணம் பாகிஸ்தான் நாட்டின் உணவு பொருட்களின் விலை உயர்வு தான். தெற்காசியாவிலேயே அதிக பணவீக்கம் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது, மார்ச் மாதம் 35.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT