செய்திகள்

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.

கிரி கணபதி

காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை 'யாஷிகா ஆனந்த்'. இவர் பிரபலமானதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் காரணமாகும். ஹைதராபாதைச் சேர்ந்தவர். நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி 28 வயதான 'வள்ளிசெட்டிபவனி'. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர் சென்னை வந்திருந்தார். இவர்கள் இருவரும் தனது ஆண் நண்பர்கள் இருவருடன் சென்னையிலிருந்து காரில் புதுச்சேரி சென்றனர். பின்னர் அங்கிருந்து ஜூலை 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தனர். 

அப்போது யாஷிகா ஆனந்த் காரை ஓட்டி வந்த நிலையில், மாமல்லபுரம் அருகே அவருடைய கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் நடுவில் உள்ள டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகா ஆனந்தின் தோழியான 'வள்ளிசெட்டிபவனி' சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த மற்ற நண்பர்கள் யாஷிகா ஆனந்த் உட்பட படுக்காயங்களுடன் உயிர் தப்பினர். இதில் யாஷிகா ஆனந்திற்கு முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 

காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக, நடிகை யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதுத்குத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக பல நாட்கள் படுத்த படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்ததால், நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் உடல்நிலை தேறியதால், கடந்த சில மாதங்களாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்து வந்திருக்கிறார். 

ஆனால் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் மட்டும் ஆஜராகாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், யாஷிகா ஆனந்த் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் பதறிப்போன யாஷிகா, இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி பிடிவாரண்டை தளர்த்துமாறு கோரிக்கை வைத்தார். 

இனி வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த மாதம் 25ஆம் தேதி நேரில் ஆஜராகக்கூறி பிடிவாரண்டை தளர்த்தினார்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

முக்தி துவாரகா! (பால்கா மந்திர்)

மனம் வறண்டு போகும்போது மழை நீரில் மீன் பிடித்தால்?

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

SCROLL FOR NEXT