செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி

கல்கி டெஸ்க்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த எஸ்சிஓ மாநாட்டில் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இது குறித்து பிரதமர் அளித்த பேட்டியில் "வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறுப்பு நாடுகளிடையே பஸ்பர ஒத்துழைப்பை பெற இந்த மாநாடு பெரிதும் வழிவகுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியிலிருந்து உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை அதன் பிரதமர் அப்துல்லா அரிபோவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

இந்த மாநாட்டில் இந்தியா , ரஷ்யா , சீனா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான், தஜிகிஸ்தான் ,கிர்கிஸ் குடியரசு ஆகிய உறுப்பினர் நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள ஈரான் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாடு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காதல் வலி!

சிறுகதை - கனவுக் குடித்தனம்!

நீங்க அதிகமா நகம் கடிக்கிறீங்களா? ஜாக்கிரதை! 

"போகும்வரை சேரும் இடம் தெரியாதெனில், போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா"!

தர்பூசணி விதை: சருமத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

SCROLL FOR NEXT