செய்திகள்

சாய்பாபாவின் ஆன்மாவுடன் பேசுவதாக நாடகமாடி ரூ.2 கோடி மோசடி!

கார்த்திகா வாசுதேவன்

மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா மற்றும் இறந்தவர்களின் ஆன்மாவுடன் தன்னால் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறி, கேரளாவைச் சேர்ந்த 52 வயது நபர், சென்னையைச் சேர்ந்த தனது நண்பரிடம் இருந்து 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த மோசடி ஒரே நாளில் நடந்து விடவில்லை. 2015 முதல் 2019 வரையிலான நான்கு ஆண்டு கால இடைவெளியில் இவ்வளவு பெரிய தொகையை கொஞ்சம் கொஞ்சமாக அவர் மோசடி முறையில் தமது நண்பரிடமிருந்து பெற்றிருக்கிறார்.

நகரின் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் புதன்கிழமை சுப்ரமணியை கைது செய்தனர். நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்தது. இந்த மோசடி குறித்து புகார் அளிக்கப்பட்டு 2022லேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தால் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், சுப்ரமணி தலைமறைவாக இருந்தார்.

புகார்தாரர், எழும்பூர் ஆண்டர்சன் சாலையைச் சேர்ந்த 52 வயது கவுதம் சிவகாமி என்பவர் நைஜீரியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது, 2005ல் சுப்ரமணியுடன் முதலில் தொடர்பு கொண்டார். அவர்கள் நண்பர்களாகி, அவர்களது குடும்பத்தினரும் நெருங்கி வந்தனர். "கௌதம் ஒரு ஆன்மீக நபர் என்பதை அறிந்த சுப்ரமணி, இறந்த ஆத்மாக்களுடன் பேசும் பல சடங்குகளை செய்தார். ஒரு சந்தர்ப்பத்தில், அவர் இறந்துபோன தனது தாயுடன் பேசுவதாக கௌதமை நம்ப வைத்தார்.

மற்றொரு சந்தர்பத்தில், சுப்ரமணி, தன்னால் மறைந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் ஆன்மாவுடன் பேச முடியும் என்று கெளதமை நம்ப வைத்தார். அதற்காக நான்கு ஆண்டு கால இடைவெளியில் நடந்த சடங்குகளில், பூஜை அறையில் இருந்த தட்டுகள் பெயர்ந்து செல்வது, எங்கிருந்தோ எலுமிச்சம் பழம் தோன்றிய சம்பவங்கள் எல்லாம் நடந்ததாக கவுதம் தனது புகாரில் கூறியுள்ளார்.

"கௌதமின் இறந்து போன தாயாருடன் தான் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் அடங்கிய மின்னஞ்சல்களை கௌதமுக்கும் சுப்ரமணி அனுப்பினார். பல சந்தர்பங்களில், சுப்ரமணி கௌதமுடைய ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தையும் எடுத்துள்ளார். அவ்வளவு மோசமாகத் தான் ஏமாற்றப்பட்டதாகவும், ஏமாறுதலின் உச்சகட்டமாக, சுப்ரமணி சொன்னார் என்பதற்காகத் தான், தனது தலையை மொட்டையடித்துக் கொண்டதாகவும் , அவர் மீது நம்பிக்கை வைத்து, வீட்டின் அமைப்பில் பல மாறுதல்களைச் செய்ததுடன் அவரது அறிவுறுத்தலின் படியே வாழ்க்கையின் முக்கிய முடிவுகளைக் கூட எடுக்கத் தொடங்கியதாகவும் கௌதம் தனது புகார்களில் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்து கெளதம் எச்சரிக்கைஉணர்வை அடைந்து சுப்ரமணி குறித்து காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது சுப்ரமணி தப்பி ஓடிவிட்டார்.

தீவிர விசாரணைக்குப் பிறகு, CCP (மத்திய குற்றப் பிரிவி) ஒப்படைப்பு ஆவண மோசடி (EDP) பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுப்ரமணியை கைது செய்தனர். கௌதம்சிவசாமியிடம் இருந்த சுப்ரமணி ஏமாற்றி பெற்றற பணத்தில் தன்னுடைய மனைவிக்கு தங்கம், வைர நகைகள் வாங்ககொடுத்ததுடன், மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பியுள்ளார் என்பது காவல் துறை விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT