செய்திகள்

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி தரிசன டிக்கெட்டுகள்! திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

திருப்பதி செல்ல மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. பக்தர்களின் சிரமத்தினை உணர்ந்து கொண்ட திருப்பதி தேவஸ்தானம் தற்போது பக்தர்களுக்கு பல்வேறு புதிய சேவைகளை வழங்கி வருகிறது. அவ்வப்போது தரிசன டிக்கெட்டுகளை இணைய தளங்கள் மூலம் வெளியிட்டும் வருகின்றது.

ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்காக 10,000 டிக்கெட்டுகளை மட்டுமே வழங்கி வந்த நிலையில், கடந்த மாதத்தில் அந்த எண்ணிக்கையை 25,000 ஆக உயர்த்தியது. அப்படி இருந்தும் ஆன்லைனில் 20 நிமிடங்களிலேயே டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்து விடுகின்றன.திருமலை திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்களில் நாளொன்றுக்கு 30,000 இலவச தரிசன டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

திருப்பதி கோயில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும் என்பதால், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீண்டகால வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நீண்டகால நோய்களால் அவதியுறுபவர்கள் ஆகியோர் ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகள் இன்று காலை 9:00 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

பக்தர்கள் தேவஸ்தான இணையதளம்  tirupathibalaji.ap.gov.in மூலம் டிக்கெட்டுகளை இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT