செய்திகள்

தேர்வில் கேள்விகளுக்கு சினிமா பாடல்களை பதிலாக எழுதிய மாணவர்!

ஜெ.ராகவன்

உலகத்தில் எந்த நகரத்தில் தேர்வு நடைபெற்றாலும் ஒழுங்காக படிக்காத மாணவர்கள் ஒன்று தேர்வில் கொடுக்கப்படும் விடைத்தாளில் ஒன்றும் பதில் எழுதாமல் அப்படியே திருப்பிக்கொடுத்து விடுவார்கள். அல்லது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தங்களுக்கு தோன்றிய ஏதாவது ஒரு பதிலை எழுதிவிட்டு வருவார்கள். இதுதான் வழக்கம். ஆனால், இந்தியாவில் ஒரு மாணவர், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சினிமா பாட்டை பதிலாக எழுதிவிட்டு வந்துள்ளார்.

இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சண்டீகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் அனைவருக்கும் சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் சினிமா பாடலை பதிலாக எழுதிவிட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பான விடியோ ஒன்று வைரலாக வெளிவந்துள்ளது. அந்த மாணவர் மொத்தம் மூன்று கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் இரண்டு கேள்விகளுக்கு ஹிந்தி திரைப்பட பாடல்களை பதிலா எழுதியுள்ளார். அதாவது த்ரீ இடியட்ஸ் படத்தில் வரும் Give Me Some Sunshine, Give Me Some Rain, Give Me Another Chance, I Wanna Grow Up Once Again” என்ற பாடலை பதிலாக எழுதியுள்ளார்.

அடுத்த கேள்விக்கான பதிலில், “ மேடம் நீங்கள் மிகவும் புத்திசாலியான ஆசிரியர். நான் தேர்வுக்கு படிக்காமல் இருந்தது என்னுடைய தப்புதான். கடவுளே! எனக்கு கொஞ்சம் அறிவைக் கொடு” என்று எழுதியுள்ளார்.

மூன்றாவது கேள்விக்கான பதிலில், பிகே ஹிந்தி படத்தி வரும் “பகவான் ஹை கதா ரீ து” என்ற பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார்.

அந்த மாணவர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுதிய பதிலை பார்த்தால் சிரிப்புதான் வரும். அந்த மாணவரின் விடைத்தாளை திருத்திய ஆசிரியரின் பதில் அதைவிட சிறப்பாக இருந்த்து.

நீ பாடல் எழுதினால் மட்டும் போதாது கேள்விக்கான பதிலையும் எழுத வேண்டும் என்று அவரது விடைத்தாளில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் அந்த மாணவர் அனைத்து கேள்விகளுக்கும் இந்த விடைகளை எழுதியிருந்த்துதான்.

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

கவிதை: அவளுக்கென்று ஒரு மனம்!

பித்தப்பை கற்கள் உருவாவதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

SCROLL FOR NEXT