செய்திகள்

அமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட்!

கல்கி டெஸ்க்

அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது. தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி ஐ.நா.வில் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அந்தப் பயிற்சியில் பங்கேற்போர் அணிய சிறப்பாக வடிவமைக்கப் பட்ட டி-ஷர்ட் வழங்கப் பட்டது.

ஐ,நா. தலையமைகத்தில் நேற்று நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் யோகா செய்த நபர்கள் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டி-ஷர்ட் தான் அணிந்து இருந்தனர் .திருப்பூரை சேர்ந்த தனியார் ஏற்றுமதி நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தின டீ-ஷர்ட்டுகளை தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது. அந்த ஆடைகளை திருப்பூரைச் சேர்ந்த தாய் எக்ஸ்போர்ட்ஸ் என்ற ஏற்றுமதி நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

தாய் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினத்துக்கு பிரத்தியேகடி-ஷர்ட்டுகளைத் தயாரித்து நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது. அதன்படி இந்தாண்டு நேற்றைய தினத்தில் நடந்த யோகா பயிற்சியாளர்களுக்காக 4,150 டி - ஷர்ட்களை அனுப்பி வைக்கப் பட்டது

கடந்த ஆண்டு 1,800 டி-ஷர்ட்கள் தயாரித்து அனுப்பி இருந்தது இந்த நிறுவனம் . இந்தாண்டு 4,150 டி - ஷர்ட்கள் தயாரித்து அனுப்பியுள்ளனர். இந்த டி-ஷர்ட்களில் எஸ். பி. ஐ. லோகோ மற்றும் யோகா தின லோகோ பொறிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நியூயார்க் கிளை 2016 முதல் சர்வதேச யோகா கொண்டாட்டத்துக்கான டீ-ஷர்ட் தயாரிப்பு ஆர்டர்களை இவர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் 8 மாலை நேரப் பழக்க வழக்கங்கள்!

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

SCROLL FOR NEXT