செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு இந்த நாளில் ரேஷன் கடைகள் இயங்கும்..!

விஜி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மற்றும் 10 ஆம் தேதி அதாவது 2 வாரத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் அனைத்து நியாயவிலைக்கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அனைத்து நாட்களிலும் அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு உணவுத்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே போதும், பலகாரம் கொண்டாட்டம் என பொதுமக்கள் ஏராளமான பொருட்கள் வாங்குவார்கள். இனிப்புகள் செய்வதற்கு தேவையான சர்க்கரை, எண்ணெய் என பல பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. 

தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்பதால் இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ளவும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

வழக்கமாக வெள்ளிக்கிழமையன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை என்ற நிலையில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக அடுத்த 2 வெள்ளிக்கிழமையும் நியாய விலை கடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான மாற்று விடுப்பு எப்போது என நியாய விலை கடை ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன் படி இன்றும், வரும் 10ஆம் தேதியும் ரேஷன் கடை திறந்திருக்கும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை இந்த நாட்களுக்குள் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT