செய்திகள்

12 கட்டளைகளும் RRR தத்துவமும்! கலக்கும் சேலம் SP!

சேலம் சுபா

12 கட்டளைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்று காவலர்களிடம் சேலம் எஸ் பி விடுத்த வேண்டு கோளானது, காவலர்கள் நமது நண்பர்கள் என்ற கருத்தின் மீதான நமது நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.

சேலம் மாவட்ட எஸ் பி சிவகுமார் மக்களைக் காக்கும் தலையாய பணியில் உள்ள காவலர்களுக்கு அவர்கள் பணியின்போது எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி பல கட்டளைகளை வேண்டுகோளாக வைத்ததை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று அவரைப் பாராட்டி வருகின்றனர். அவர், ஆஸ்கர் விருது பெற்ற பாடல் இடம் பெற்ற ஆர் ஆர் ஆர் (RRR) பெயரைச் சொல்லி அதன்படி நடக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. ட்ரென்ட்டிங்கில் உள்ளதைக் கூறி காவலர்களுக்கு புது உற்சாகத்தைத் தந்துள்ள எஸ் பியின் கருத்துகள் இதோ.

சேலம் மாவட்ட எஸ் பி சிவகுமார்

மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் முக்கியமான இந்தப்  12 கட்டளைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கட்டளைகள் இதோ;

* னைவரிடமும் அன்புடன் நடந்து காவல் பணியாற்ற வேண்டும்.

* னு கொடுக்க வரும் புகார்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் தேவையில்லாமல் அவர்களை காத்திருக்க வைக்க கூடாது.

* சாலை விபத்துகளை தடுக்க தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து என்ன காரணத்தினால் விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பதை அறிந்து அதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

* கோவில் திருவிழாக்களில் தகுந்த பாதுகாப்புகள் செய்து விழா நடத்துபவர்களிடம் கலந்து பேசி திருவிழா முடியும் வரை இருந்து எந்த வித பிரச்சனையும் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* ங்கள் பகுதியில் வசிக்கின்ற பணிபுரிகின்ற புலம்பெயர்ந்த வட மாநில மக்களிடம் தினம் தினம் கலந்து பேசி அவர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்று பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

* ங்களை தேடி வரும் பொதுமக்களிடம் நீங்கள் அன்பாக கனிவாக நடந்து கொண்டால் மட்டுமே பிரச்சனையின் போதும் களப்பணியின் போதும் அவர்களை தேடி செல்லும் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

* நல்லவர்களுக்கு பாதுகாப்பாகவும் கெட்டவர்களுக்கு பயத்தையும் உண்டாக்கும் வகையிலும் உங்கள் பணி சிறந்து இருக்க வேண்டும்.

* உங்களுக்கு கீழ் பணி புரிகின்ற காவலர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும்.

* ஒவ்வொரு காவலர்களும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் திருட்டு குற்றங்களை கண்டுபிடிப்பதில் வல்லவர் களாகவும், சிலர் பொதுமக்களிடம் நன்றாக பேசுவது, வழக்கு கோப்புகளை எழுதுவது, நீதிமன்றத்தில் சிறப்பாக செயல்படுவது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற திறமைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது திறமைகளை அறிந்து சிறப்பாக வேலை வாங்குவது உயர் அதிகாரிகளின் திறமையாகும்.

* கடின உழைப்புடன் திட்டமிட்டு செயல்படும் உழைப்பும் இருந்தால் மட்டுமே நாம் முழு வெற்றியை பெற முடியும்.

* காலை, மாலை, இரவுகளில் பிடி ஆணைகளை நிறைவேற்றுதல், போக்கிரிகளை தணிக்கை செய்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நீதிமன்றங்களுக்கு செல்லுதல், வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தல், சமூக குற்றங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுதல், பெண்கள் வயதானவர்களுக்கு பாதுகாப்பு செய்தல், பள்ளி, கல்லூரி பகுதிகளில் கண்காணித்தல் போன்ற பலவிதக் கலவையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* வாகன தனிக்கையின்போது பொதுமக்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தில் குடும்ப தலைவர்கள் அவர்கள் குடும்பத்துடன் பயணிக்கிறார்கள். குடும்பத்தினர் முன்பு அவரை அவமானப்படுத்தக் கூடாது. என்ன தவறு செய்திருக்கிறார்களோ அதை கண்ணியமாக எடுத்துச் சொல்லி அதற்குரிய வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

மொத்தத்தில் கண்ணியத்தோடு காவல் பணியாற்றி சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

இந்த 12 கட்டளைகளுடன் டிரிபிள் ஆரை (RRR) கண்டிப்பாக செயல்படுத்தவும் சேலம் எஸ் பி சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் சொன்ன RRR என்ன?

 உங்களுக்கு கீழ் பணிபுரிகின்ற அனைவருக்கும் ஆர் ஆர் ஆர் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

(Respect) மரியாதை. உங்களுக்கு கீழ் பணி புரியும் அனைவருடமும் மரியாதையுடன் பேசுவது மிக மிக முக்கியம்.

(Recognition) அங்கீகாரம். சிறப்பாக செயல்பட்டு வரும் அனைவரின் திறமைகளை பாராட்ட வேண்டும். அங்கீகரிக்க வேண்டும் வெகுமதிகள் அளிக்கப்பட வேண்டும்.

(Rest) ஓய்வு. காவலர்களின் உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். அவர்களுக்கு போதிய ஓய்வு வருமாறு உங்கள் அன்றாட திட்டங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியாக உடல் நலம் இருப்பதில்லை அதனால் தேவையான விடுமுறைகளை உடனடியாக தர வேண்டும்.

      இதுவரை எத்தனையோ காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளனர். ஆனால் காலத்துக்கேற்ற வகையில் அருமையான கட்டளைகளையும் RRR (டிரிபிள் R) என்ற தத்துவத்தையும் வேண்டுகோளாக எடுத்துச் சொல்லி தங்கள் கடமைகளை காவலர்கள் மனதில் பதிய வைத்திருக்கும் இருக்கும் சேலம் எஸ் பி உண்மையில் பாராட்டுக்குரியவர். இவர் சொன்னது போல் சேலத்தில் மட்டுமல்ல மற்ற ஊர்க் காவலர்களும் நடந்து கொண்டால் பொதுமக்களாகிய நாம் நிம்மதியாக இருக்கலாம்.

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT