செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வு வயதைக் குறைக்க யோசனை!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 2021ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் 58லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை பிறப்பித்தது அரசு. இந்த ஆணை 2021 மே 31ம் தேதிக்குள் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் எனவும் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணித் திறனில் பாதிப்பு ஏற்படும் என பல்வேறு தரப்பினரிடமிருந்து தகவல் வெளியாகி உள்ளது. கண் பார்வை கோளாறு, முதுமையினால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளால் பேருந்துகளை இயக்கும்போது சிக்கல் ஏற்படுவதால் பலர் விருப்ப ஓய்வு பெற்று செல்வதாகவும், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்பதால் ஓய்வு பெறும் வயது வரம்பு 58 போதும் என தொழிலாளர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனை ஏற்று தற்போது போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பை மீண்டும் 60லிருந்து 58ஆகக் குறைப்பது என தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வு வயதை 58 ஆக குறைப்பதற்கு துறை சார்ந்து அரசுக்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த அரசு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT