செய்திகள்

மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்ட எருது விடும் திருவிழா! இன்று கோலாகலமாக தொடக்கம்!

கல்கி டெஸ்க்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் பகுதியில் எருது விடும் திருவிழா 52 ஆண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பாண்டிற்கான எருது விடும் திருவிழாவிற்கு 19.1.23 அன்று நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்தனர்.ஆனால் அன்றைய தினம் எருது விடும்

திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாததால் மறுநாள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் மற்றம் செய்யப்பட்டது.

மீண்டும் அடுத்த நாளும் எருது விடும் விழாவிற்கு அதிகாரிகள் அனுமதி தருவதில் அலட்சியம் காட்டியதால் 24-ஆம் தேதியான இன்று நடத்திக்கொள்ளலாம் என வருவாய்த்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து நோட்டிஸ் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அனுமதி சீட்டும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருப்பதாக கூறி எருது விடும் விழாவை வருகின்ற 30 ஆம் தேதி நடத்தலாம் என விழாக் குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் மூன்றாவது முறையாக எருது விடும் விழா ரத்து செய்யப்பட்டது.

30 தேதி நடக்கவிருந்த எருது விடும் திருவிழா 24-ஆம் தேதியான இன்றைய தினமே விழாவை நடத்தலாம் என வருவாய் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து எருது விடும் திருவிழா இன்று தொடங்கியது.

எருது விடும் திருவிழாவை நாட்றம்பள்ளி தாசில்தார் குமார், ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் தீயணைப்பு தறை, கால் நடைத்துறை, பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்று தொடங்கி வைத்தனர். ஆறு வழியாக மூன்று முறை ஒத்திக்க வைக்கப்பட்ட எருது விடும் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

SCROLL FOR NEXT