டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம் புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கியில் சென்ற ஐந்து பேர் பலியான சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து பேசியுள்ள ஜேம்ஸ் கேமரூன், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து நிச்சயம் நடக்கும் என தமக்கு முன்பே தெரியும் என்று எனத் கூறியுள்ளார். மேலும் அந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த திங்களன்றே வெடித்து சிதறிவிட்டது என்பது தனக்குத் தெரியும், அதன்பின் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் எல்லாம் நாடகம் இன்று சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறியுள்ளார்.
இவர் வெறும் டைட்டானிக் திரைப்பட இயக்குனர் தானே, இவருக்கு எப்படி இதைப் பற்றி தெரியும்? என நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆனால் டைட்டானிக் படத்தை, பிறர் கூறிய கதைகளைக் கேட்டு இவர் எடுக்கவில்லை. டைட்டானிக் கப்பல் சார்ந்து பல ஆராய்ச்சிகளையும் இவர் செய்திருந்தார். அதற்காக சுமார் 33 முறை கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை இவர் பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்தமாக இவரே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கி, அதில் வெற்றிகரமாக பயணமும் மேற்கொண்டுள்ளார். கடலுக்கு அடியில் அதிக ஆழத்திற்குப் போனதற்கான கின்னஸ் ரெக்கார்டையும் படைத்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். மேலும், நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைக்கும் டிசைனர்கள் குழுவில் ஒரு முக்கிய நபராகவும் இருக்கிறார். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில்,
"டைட்டன் நீர்மூழ்கி கப்பல் திங்களன்று வெடித்து சிதறிய விஷயம் எங்களுடைய குழுவின் மூலமாக எனக்குத் தெரிந்துவிட்டது. அதன் பிறகு எனக்கு தெரிந்த நபர்களிடம் நான் சேகரித்த தகவல் படி, நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் அறிந்தேன். இதை கேள்விப்பட்டதுமே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதேசமயம் தொடர்பு துண்டிக்கப்பட்ட போது ஏதோ சத்தம் கேட்டதாகவும் சொன்னார்கள். அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துவிட்டது என்று".
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்திருப்பது தன்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளது எனவும், ஏற்கனவே, தான் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்த பயணங்களின் போது தனக்குக் கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே அங்கு சென்ற மூன்று நீர்மூழ்கிகளும் இதே பிரச்சனையை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜேம்ஸ் கேமரூன் சொல்வது போல், அங்கு உண்மையிலேயே ஏதாவது அமானுஷ்ய சக்தி இருக்கிறதா என சந்தேகம் எழுகிறது.