செய்திகள்

மல்யுத்த போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் கூறாமல் ஓட்டமெடுத்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி!

கல்கி டெஸ்க்

ந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும் மத்திய அமைச்சருமான பிரிஜ்பூஷன் மற்றும் சில பயிற்சியாளர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் , அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவின்போது பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் நேற்று தாங்கள் வாங்கிய பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக அறிவித்து, அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்தக் கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல், ‘சட்டப்படி நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது’ என்று கூறிவிட்டு, அங்கிருந்து உடனே வேகமாக நழுவினார். ஆனால், அவரை விடாமல் செய்தியாளர்களும் கூடவே சென்றதால்  ஒருகட்டத்தில் அவர் ஓட ஆரம்பித்து விட்டார். அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களும்  கூடவே ஓட, வேகமாகச் சென்ற அமைச்சர் தனது காரில் ஏறிச் சென்று விட்டார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூற முடியாமல் அமைச்சர் ஒருவர் ஓடிச் சென்ற அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் கட்சியினர், ‘மல்யுத்த வீரர்களின் பிரச்னையில், மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கடுமையான எதிர்வினைகளை வழங்கி இருப்பதைப் பாருங்கள்’ என்றும் கேலி செய்து இருக்கின்றனர்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT