Helicopter 
செய்திகள்

பெங்களூருவில் இனி வேலைக்கு ஹெலிகாப்டரில் போகலாம்!

கல்கி டெஸ்க்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலைக் குறிக்கும் வகையில் விரைவில் ஹெலிகாப்டர் பயண சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 -இதுகுறித்து ‘'பிளேட் இந்தியா' என்ற நிறுவனம் அறிவித்ததாவது:

 பெங்களூருவில் முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருவதால், மக்கள்தொகை அதிகரித்துள்ளது. அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதர்கு தீர்வாக பெங்களூரு நகருக்குள் மட்டும் ஹெலிகாப்டர் சேவை வழங்க தீர்மானித்துள்ளோம்.

முதற்கட்டமாக இந்த சேவை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதி வரையில் இருக்கும். இந்தப் பகுதிக்கு சாலை மார்க்கமாக சென்றால் 2 மணி நேரம் ஆகும். ஆனால் ஹெலிகாப்டர் மூலமாக வெறும் 12 நிமிடத்தில் சென்று விடலாம்.

இப்போதைக்கு நாள் ஒன்றுக்கு ஒரே முறை மட்டுமே இரு மார்க்கத்திலும் ஹெலிகாப்டர் சேவை அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான வரவேற்பைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப் படும். இதன் தொடக்க சேவையாக தினமும்  காலை 9 மணி மற்றும் மாலை 4.15 என பயணத்திற்கான நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கட்டணம் ரூ.3,250 ஆகும். இந்த சேவை எதிர்வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கும்.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT