செய்திகள்

உலக ஆணழகன் போட்டி: தமிழக தலைமைக் காவலர் பங்கேற்பு!

கல்கி

சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டி வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் முதல் 7-ம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள தாஷ்கண்ட்டில் நகரில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் தமிழக தலைமைக் காவலரான  புருஷோத்தமன் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் அவரை சென்னை காவல்துறை ஆணையர் சம்ஹ்கர் ஜிவால் நேரில் அழைத்துப் பாராட்டி நிதியுதவி வழங்கியுள்ளார்.

சென்னை, அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் புருஷோத்தமன். இவர் கடந்த 2000 ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றுள்ளார். காவல் துறையினருக்கான அகில இந்திய போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளார். இந்நிலையில், புருஷோத்தமன் உஸ்பெகிஸ்தான் நாட்டில் தாஷ்கண்ட்டில் அக்டோபர் 1-ம் தேதிமுதல் 7-ம் தேதிவரை நடைபெறவுள்ள உலக ஆணழகன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதனையறிந்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புருஷோத்தமனை நேரில் அழைத்து பாராட்டி, ரூ.75 ஆயிரம் நிதியுதவி வழங்கி, போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

இன்பாவுக்கு வந்தது இன்பம் தரும் செய்தி!

அடேங்கப்பா... கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் பயன்கள்!

லோன் வாங்கப் போறீங்களா? அதற்கு முன்பு இதை கொஞ்சம் படிங்க!

விமர்சனம் - அரண்மனை 4 - இது 'பழைய பல்லவி பாடும்' பேய் இல்லை… அதுக்கும் மேல! 

சம்மரில் உங்க காரை பராமரிக்க நச்சுனு சில டிப்ஸ்! 

SCROLL FOR NEXT