தொழில்நுட்ப முன்னேற்றம் தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருவதால் விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். அந்த வகையில் நாய்களை விட ஆயிரம் மடங்கு மோப்ப சக்தி கொண்ட AI சென்சார் பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் மூக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உணவில் உள்ள விஷத்தைக்கூட துல்லியமாகக் கண்டுபிடிக்குமாம்.
இஸ்ரேல் பென் குரியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள்தான் இந்த எலக்ட்ரானிக் கேஜெட்டை கண்டுபிடித்துள்ளனர். இது பார்ப்பதற்கு மனித மூக்கைப் போலவே இருக்கும் வாசனையை நுகரக்கூடிய சாதனமாகும். மனித மூக்கின் மிக முக்கிய நோக்கமாக பார்க்கப்படுவது அதன் வாசனை நுகரும் திறன்தான். ஒருவரது மூக்கில் சுமார் 400 க்கும் அதிகமான வாசனை உணரும் ரிசப்டார்கள் உள்ளன. அவற்றால் ஒரு ட்ரில்லினுக்கும் அதிகமான வாசகங்களையும், துர்நாற்றங்களையும் கண்டறிய முடியும்.
ஒருவேளை யாருக்காவது மூக்கு பாதிக்கப்பட்டால், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்ப சக்தி கருவியை உருவாக்க முடியுமா? என விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோப்ப சக்தியை செயற்கையாக உருவாக்க முடியும் என்பதையும் நிரூபித்துவிட்டனர்.
இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், மனிதர்களின் உணவுப் பழக்கம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. நீண்ட நாள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாம் சாப்பிடுவதால் அது எப்போது விஷமாக மாறியிருக்கும் என்பது யாருக்கும் தெரிவதில்லை. இது மனித உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே உணவில் உள்ள விஷத்தைக் கண்டறிய மக்களுக்கு ஒரு சாதனம் கிடைத்தால் உதவியாக இருக்கும் எனும் நோக்கிலேயே இது உருவாக்கப்பட்டது.
பூமியில் உள்ள உயிரினங்களில் நாயக்கு தான் அதிக மோப்ப சக்தி உள்ளது என நமக்குத் தெரியும். ஆனால் இனி அப்படி சொல்ல முடியாது. ஏனென்றால் இந்த சாதனம் நாய்களை விட சுமார் ஆயிரம் மடங்கு அதிக மோப்ப சக்தி கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் பல கருவிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஏற்படலாம்.