Bard and Gemini. 
அறிவியல் / தொழில்நுட்பம்

சுந்தர் பிச்சை செய்தது நியாயமா?.. Bard-ம் நான்தான், Gemini-ம் நான்தான்!

கிரி கணபதி

கூகுள் நிறுவனம், தங்களின் Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. 

2023 ஆம் ஆண்டு ChatGPT-க்கு போட்டியாக களத்தில் இறக்கப்பட்டதுதான் கூகுள் நிறுவனத்தின் BardAI Chatbot. பல மேம்படுத்தல்களுக்குப் பிறகு இந்த சேட்பாட் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், அதன் பெயர் தற்போது Gemini என மாற்றப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு சாதன பயனர்கள் தங்கள் சாதனங்களில் எப்படி google assistant-ஐ பயன்படுத்துகிறார்களோ அதேபோல Gemini-ஐ அசிஸ்டன்டாக தேர்வு செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது. 

அதாவது வாய்ஸ் பட்டனை கிளிக் செய்து okay google என்று கூறினால் Gemini AI அசிஸ்டன்ட்டை கொண்டு வர முடியும். இதன் மூலமாக ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் சாதனத்தில் என்னென்ன கட்டுரைகள் படிக்கிறார்கள், என்னென்ன செய்கிறார்கள், என்னென்ன ஆப்ஸ் இயக்குகிறது போன்றவற்றை ஜெமினி கண்காணிக்கும். அவற்றில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக ஜெமினியை அணுகலாம். 

மேலும் நீங்கள் எதைப் பற்றியாவது தெரிந்து கொள்ள விரும்பினால், அதை புகைப்படம் எடுத்து நேரடியாக ஜெமினியிடம் கேட்டால் அதற்கான பதிலை உடனடியாகக் கொடுத்துவிடும். ஐபோன் பயனர்களுக்கு இந்த அம்சமானது விரைவில் கூகுள் செயலியில் வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த அம்சம் அமெரிக்காவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு எப்போது இது வெளிவரும் என்ற விவரங்களை கூகுள் பகிரவில்லை. 

இந்த ஜெமினி செயற்கை நுண்ணறிவின் அட்வான்ஸ் லெவலை பயன்படுத்த விரும்புபவர்கள் மாதம் 19.99 டாலர்கள் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். கூகுளின் சக்தி வாய்ந்த லாங்குவேஜ் மாடலான ஜெமினியால், கேள்விகளுக்கு பதில் அளிப்பது, உரையாடல் நடத்துவது, டெக்ஸ்டுகளை உருவாக்குவது, கம்ப்யூட்டர் கோட் உருவாக்குவது போன்ற பல விஷயங்களை செய்ய முடியும். அல்ட்ரா, ப்ரோ, நானோ என மூன்று வெர்ஷன்களில் வரும் ஜெமினி அந்தந்த வெர்ஷனுக்கு உண்டான பணிகளை சிறப்பாக செய்யவல்லது. 

இது எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என கூகுள் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT