Google Pay.
Google Pay. 
அறிவியல் / தொழில்நுட்பம்

Google Pay பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை தீர்க்கும் வழி!

க.இப்ராகிம்

கூகுள் பே பயன்படுத்தும் பொழுது சில பயனாளர்கள் சில பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர் அவற்றை தீர்க்கும் வழி.

UPI எனப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனை அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார செயல்பாடாக இணைய பரிவர்த்தனை மாறி இருக்கிறது. சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் இன்று யுபிஐ பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை எல்லா வகையான தேவைகளுக்கும் பெரும்பாலும் யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.

அதிலும் பிரதானமாக கூகுள் பே செயலி மிக முக்கிய யுபிஐ பரிவர்த்தனை செயலியாக உள்ளது. இந்த நிலையில் கூகுள் பேவில் பணம் செலுத்தும் மக்கள் சந்திக்கக்கூடிய முக்கிய சிக்கல்களில் ஒன்று, பணம் டெபிட்டான பிறகும் பெருநரை சென்றடையாது. அப்படியான சமயங்களில் 48 மணி நேரத்திற்குள் அனுப்புனருக்கு பணம் மீண்டு விடும், 48 மணி நேரத்தில் இவ்வாறு ஆகவில்லை என்றால், கூகுள் பே செயலி வழியாகவே புகார் அளிக்க முடியும்.

இதற்காக கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தில் transaction history > select the transaction > having a issue > payment issue ஆகிய விதிமுறைகளை பின்பற்றி புகாரை அளித்து பணத்தை பெற முடியும். அல்லது 1800 4190 157 என்ற கட்டணம் இல்ல தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்து பணத்தை திரும்ப பெறலாம்.

சில நேரங்களில் வங்கிகளில் ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளால் பணம் அனுப்பும்போது எரர் காட்டப்படும். அந்த நேரங்களில் மற்ற யுபிஐ பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்தி பயன்பெறலாம்.

சில நேரங்களில் க்யூ ஆர் கோடு மற்றும் பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அந்த நேரங்களில் இன்டர்நெட் ஆக்டிவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூகுள் பேவில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தீர்க்க முடியும்.

IPL 2024: “இதுதான் என்னுடைய கடைசி” – ரோஹித் ஷர்மா பேசிய வீடியோ!

ஆன்மிகக் கதை: பக்தனின் லட்சணம் என்னவென்று தெரியுமா?

முட்டையை தலையில் தடவும் நபரா நீங்கள்? இது தெரிஞ்சா தடவ மாட்டீங்க!

மாலத்தீவிலிருந்து அனைத்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றம்!

குளு குளு கும்பக்கரை அருவி!

SCROLL FOR NEXT