ஸ்பெஷல்

ஐபிஎல் 15-வது சீசன்: சிஎஸ்கே அணியில் இணைந்த புதிய அயர்லாந்து பவுலர்!

கல்கி

ஐபிஎல் 15வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 26-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த முறை அனைத்து அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றுகள் நடத்தப்படவுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்,  அயர்லாந்தை சேர்ந்த ஜோஸ் லிட்டில் என்ற 22 வயது வேகப்பந்துவீச்சாளர் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து அயர்லாந்து கிரிக்கெட் வாரியமும் தனது ட்விட்டர் பக்கத்தில் இச்செய்தியை உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி சூரத்தில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதானத்தில் நேற்று பயிற்சி முகாமைத்  தொடங்கியது. இதில் கேப்டன் தோனி உள்ளிட்ட அணியின் முக்கிய வீரர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த சீசன் முழுவதும் சிஎஸ்கேவுக்கு வலைப்பயிற்சி பவுலராக ஜோஸ் லிட்டில் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிஎஸ்லே அணியின் முன்னணி பவுலரான தீபக் சஹாருக்கு காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டதையடுத்து இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில் அவர் இடம்பெற மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஜோஸ் லிட்டில் களமிறக்கப் படுவார் என்றும் எதிரபார்க்கப் படுகிறது.

தேவ மருந்து தவசிக்கீரை!

Bread Kulfi Recipe: பிரட் இருந்தால் போதும், வீட்டிலேயே செய்யலாம் சுவையான குல்பி!

இந்திய நேர மண்டலத்தால் சாதகமா? பாதகமா?

அதிக புரதம் நிறைந்த 10 சைவ உணவுகள்!

லகு நாரியல் என்றால் என்னவென்று தெரியுமா?

SCROLL FOR NEXT