தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர இம்மாதம் 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண்வர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தனியார் இ–சேவை மையங்கள் மூலமாகவோ, தங்கள் பள்ளிகள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.
இதற்காக தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் ஆன் லைனில் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வின்ணப்பங்கள் வந்து சேர்ந்தபின், ஜூலை 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். பின்னர் ஆகஸ்ட் 8-ம் தேதி மாணவர்களுக்கான தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 14-ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22-ம் தேதியில் கவுன்சிலிங் துவங்கும்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.