ஸ்பெஷல்

ஜெய்ப்பூரில் இன்று நிலநடுக்கம்; அச்சத்தில் பொதுமக்கள்!

கல்கி

ராஜஸ்தானிலுள்ள ஜெய்ப்பூரில் இன்று காலை  3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வுமையம் வெளியிட்ட தகவல்;

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று காலையில்  3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஆண்டு இந்தியாவில் பல இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் தீவிரம் குறைவாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் தரவுகளின்படி, கடந்த வருடம் நாட்டில் மொத்தம் 965 சிறிய மற்றும் பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 7.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு நிலநடுக்கம் அபாயகரமானதாக கருதப்படுகிறது.

-இவ்வாறு தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க வெட்டிவேரை இப்படிப் பயன்படுத்தலாமே!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயோபிக்கில் விஷால்… இது லிஸ்ட்லையே இல்லையேபா!

பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

SCROLL FOR NEXT