ஸ்பெஷல்

அசைவப் பிரியர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்: சனிக்கிழமை நடைபெறும்!

கல்கி

தமிழகத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கான பிரத்தியேக மெகா தடுப்பூசி முகாம் வருகிற சனிக்கிழமையன்று (அக்டோபர் 23) நடைபெறும் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுபாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில், தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் களை நடத்திவருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்துப் பேசியதாவது:

அசைவம் உண்ணும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது எனதவறாகக் கருதி, பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காக பிரத்தியேகமாக இந்த வாரம் சனிக்கிழமை(அக்டோபர் 23) மெகா தடுப்பூசி முகாம்நடத்தப்படும். இன்னும், கிட்டதட்ட 30 லட்சம் பேர்இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள முன்வர வேண்டும். மேலும், நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு சேவை செய்ய உள்ளோம். இதன் மூலம் குடிசை பகுதி மக்கள் மட்டும்அல்லாமல் பள்ளிமாணவர்களும் பயன்பட உள்ளனர். தேவைப்பட்டால், கூடுதல் நடமாடும் பல் மருத்துவ வாகனம் வாங்கப்படும்.

-இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.

வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது கவனிக்க வேண்டியவை!

சங்கு ஒலிப்பதில் இத்தனை விஷயங்கள் இருக்கா?

நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக்கூடிய சில மரங்களும் அவற்றின் பயன்களும்!

இந்தியா வந்த வணிகக் கப்பலை தாக்கிய ஹவுதி படை…!

T20 World Cup: “அணியில் இளம் வீரர்கள் நிறையே பேர் வேண்டும். விராட், ரோஹித் வேண்டாம்.” – யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT