Traffic Accidents 
ஸ்பெஷல்

போக்குவரத்து விபத்தே நடக்காத நாடுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?

A.N.ராகுல்

தினம் ஒரு விபத்து குறித்து தொலைக்காட்சியிலோ, செய்தித்தாளிலோ பார்க்காமல் நம் நாள் அவ்வளவு எளிதில் இப்போதெல்லாம் கடந்து போவதில்லை. அது தற்செயலாகவோ அல்லது அலட்சியத்தாலோ, நம் ஊரில் எங்கோ ஒரு முலையில் நடக்க தான் செய்கிறது. ஆனால் இதிலும் சில நாடுகள் வேறுபட்டு குறைவான விபத்து சதவீதத்துடன் தனித்து நிற்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

குறைவான விபத்துகளை சந்திக்கும் சிறந்த நாடுகள்:

சாலை பாதுகாப்பு என்று வரும்போது, சில நாடுகள் குறைந்த விபத்து சதவீதங்களோடு தொடர்ந்து உலகில் தனித்து நிற்கின்றன. இவற்றில், மொனாக்கோ(Monaco), மைக்ரோனேஷியா(Micronesia), ஸ்வீடன்(Sweden) மற்றும் நார்வே(Norway) ஆகியவை பெரும்பாலும் குறிப்பிடப்படுபவை. உதாரணமாக, மொனாக்கோவில், சராசரியாக 100,000 நபர்களுக்கு கிட்டத்தட்ட பூஜ்ஜிய சதவீத இறப்புகளுடன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சாதனையைப் பதிவு செய்து முன்னணியில் உள்ளது. அதேபோல், மைக்ரோனேசியா மற்றும் ஸ்வீடனில் போக்குவரத்தால் வரும் இறப்பு விகிதங்கள் மிகக் குறைவு, சராசரியாக 100,000 பேரில் ஆண்டுக்கு 1.9% மற்றும் 2.8% மட்டுமே விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு காரணம் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பயனுள்ள கொள்கைகள், உள்கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான பொது விழிப்புணர்வு ஆகும். இவற்றின் மூலம் இந்த குறைந்த விபத்து விகிதங்களை இந்த நாடுகளால் கடைபிடிக்க முடிகிறது.

குறைந்த விபத்து விகிதங்களை நிலைநிறுத்துவதற்கான உத்திகள்:

போக்குவரத்துச் சட்டங்களின் கடுமையான அமலாக்கம்: ஸ்வீடன் மற்றும் நார்வே போன்ற நாடுகளில் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. இந்தச் சிறப்பான சட்டங்கள் எல்லாம் கடுமையாகச் பின்பற்றப்பட்டு, ஓட்டுநர்கள் அனைவரையும் அரசால் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வழிவகை செய்கிறது.

மேம்பட்ட உள்கட்டமைப்பு: பாதுகாப்பான சாலை உள்கட்டமைப்பின் வளர்ச்சி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஸ்வீடனில் விஷன் ஜீரோ(Vision Zero initiative) என்ற முன்முயற்சியை செயல்படுத்தியுள்ளது, இதன் மூலம் போக்குவரத்து விபத்தால் நிகழும் அனைத்து இறப்புகளும், அதனால் வரும் காயங்களும் ஓரளவு தவிர்க்க படுகிறது. முக்கியமாக சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும், பாதசாரிகளுக்கு என தனித்தனி பாதைகள் போன்ற விபத்துகளை முடிந்தவரை குறைக்கும் சாலைகளின் வடிவமைப்பு போன்ற விஷயங்களால் இது சாத்தியமாகிறது.

பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: சாலை பாதுகாப்பு பற்றிய தொடர்ச்சியான பொது கல்வி பிரச்சாரங்கள் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை உருவாக்க உதவுகின்றன. இந்த பிரச்சாரங்கள் பெரும்பாலும் வேகமாக ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், சீட் பெல்ட்களின் முக்கியத்துவம் மற்றும் அலட்சியமாக செயல்படுவதால் வரும் தீமைகள் போன்றவை சொல்லப்படுகின்றன.

தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்: வேக கேமராக்கள் மற்றும் தானியங்கி போக்குவரத்து அமலாக்க அமைப்புகள்(automated traffic enforcement systems) போன்ற தொழில்நுட்பத்தின் பயன்பாடு போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து கட்டுப்படுத்த உதவுகிறது. கூடுதலாக, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நவீன வாகனங்கள் விபத்துகளின் தீவிரத்தை குறைக்க உதவுகின்றன.

இது போல் மற்ற நாடுகளும் எவ்வாறு இந்நிலைக்கு வரலாம்:

பாதுகாப்பான உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும்: நன்கு வடிவமைக்கப்பட்ட பாதசாரிகள் கடக்கும் பாதைகள், அதிவேக சாலையில் இருப்பது போல் இருசக்கர வாகனங்களுக்கு என தனி பாதைகள் கட்டாயம் ஆக்க வேண்டும் மற்றும் பல்வேறு வகையான போக்குவரத்தைப் பிரிக்கும் தடைகள் உள்ளிட்ட பாதுகாப்பான சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசாங்கங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து கொண்டே இருக்க வேண்டும்.

பொது விழிப்புணர்வை ஊக்குவித்தல்: தொடர்ச்சியான கல்வி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் சாலை பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் அணுகுமுறையை சிறுவயதிலிருந்தே மாற்ற உதவும். அதற்கு பாதுகாப்பற்ற வாகனம் ஓட்டும் செயல் மற்றும் எப்படி பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும், போன்ற விஷயங்களை தொடர்ந்து பொதுமக்களிடம் பரப்பி கொண்டிருந்தால், அதுவே சமூகங்களை நீண்ட கால நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT